2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் சீனா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதன்படி 14 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 29 பதக்கங்களை சீனா வென்றுள்ளது.
இரண்டாம் இடத்திலுள்ள அமெரிக்கா, 13 தங்கம், 13 வெள்ளி 10 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 36 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
13 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 22 பதக்கங்களை பெற்று ஜப்பான் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
7 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலம் என அடங்கலாக மொத்தமாக 25 பதக்கங்களுடன் ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளது.
அவுஸ்ரேலியா, பிரித்தானியா, தென்கொரியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முறையே முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.