கேரளாவில் அடுத்த மூன்று வாரகாலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க கூடும் என தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தேசிய கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் எஸ்.கே.சிங் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், ‘கேரளாவில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்படுவதன் மூலம் நோயாளிகளை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காகவே சனி, ஞாயிறு, நாட்களில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை குறைந்த நபர்களுடன் நடத்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.