கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 75 ஆயிரத்து 212ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 3 இலட்சத்து 4 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாதொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.