இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 534 ரக விமானம், மொஸ்கோவ் நகரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 51 பேரும் இலங்கைத் தூதுவரும் வருகைத் தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் வாரந்தோறும் இரவு 10.20 மணிக்கு மொஸ்கோவ் நகரில் இருந்து புறப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.10 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.