இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 42 ஆயிரத்து 566 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 17 இலட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 4 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 561 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.