வடக்கு அயர்லாந்து பிரித்தானியாவில் அதிக கொவிட் தொற்று வீதத்தை கொண்டுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு மாதமாக வடக்கு அயர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுகள் கணிசமாக அதிகரித்துள்ளது. அத்துடன், மருத்துவமனையில் சேர்க்கப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஆனால், தடுப்பூசி அதன் பணியைச் செய்து வருகிறது என்பதையும் தரவு சுட்டிக்காட்டுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் கடைசி எழுச்சியைப் போல மோசமான விடயங்கள் எங்கும் பதிவாகவில்லை.
பிரித்தானிய அரசாங்கத்தின் சமீபத்திய தரவு, ஒகஸ்ட் 1 வரை ஏழு நாட்களுக்கு, வடக்கு அயர்லாந்தின் நோய்த்தொற்று வீதம் (100,000 மக்கள்தொகைக்கு) வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தை விட மூன்று மடங்கு அதிகம்.
இதற்கமைய இங்கிலாந்து – 282.1, ஸ்கொட்லாந்து – 143.6, வேல்ஸ் – 141.5, வடக்கு அயர்லாந்து – 445.3 நோய்த்தொற்று வீதம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.