கொரோனா தொற்று நாளாந்தம் அதிகரித்து வருவதால், அடுத்த சில நாட்களில் நாட்டை முடக்க வேண்டி வரலாம் என ஆளும்கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலையில் இது கடினமான முடிவு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார சுமித்ராச்சி தெரிவித்தார்.
இருப்பினும், மக்களின் உயிரைக் காப்பாற்ற குறைந்தபட்சம் ஒரு குறுகிய காலத்திற்கு என்றாலும் நாட்டினை முடக்க வேண்டி ஏற்படும் என்றும் அவர் கூறினார்.