ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேறியதையடுத்து தொடர்ந்து முன்னேறி வரும் தலிபான்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இதில் அரசாங்கத்துக்கு கேந்திர மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த வடக்குப் பகுதியில் அமைந்துள்ள குண்டூஸ் நகரமும் அடங்கும்.
இதுதவிர சார்-ஈ-புல் மற்றும் தலோகான் ஆகிய நகரங்களும் தலிபான்கள் வசமாகியுள்ளது.
இந்த மூன்று நகரங்களுடன் சேர்த்து வெள்ளிக்கிழமை முதல் ஐந்து மாகாணத் தலைநகரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
வடக்கு ஆப்கானித்தானில் உள்ள ஜாஸ்ஜான் மாகாணத்தின் தலைநகர் ஷெபெர்கானை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தலிபான்கள் அறிவித்தனர். வெள்ளிக்கிழமை நிம்ரோஸ் மாகாண தலைநகரான சராஞ் நகரைக் கைப்பற்றினர்.
தலிபான்கள் தொடர்ந்து தங்கள் தாக்குதல் மூலம் முன்னேறி வருவதால், எதிர்வரும் மாதங்களில் பெரிய நெருக்கடி ஏற்படலாம் என மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.