நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி வாரத்தில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து எதிர்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆலோசனைக் கூட்டம் 10 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜுலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
ஒகஸ்ட் மாதத்தின் 13 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதனை வலியுறுத்தி சபை அமர்வுகளின் போது எதிர்கட்சிகள் அமளியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சபை அமர்வுகள் அவ்வவ்போது ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.