வவுனியா மாவட்ட மக்கள் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் இலங்கையில் கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்திலும் என்றும் இல்லாத வகையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “வவுனியா மாவட்டத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து செல்கின்றது.
இது எமது மாவட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதால், பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை சீராக பின்பற்றுவதுடன், சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தரும் நோயாளர்களில் கணிசமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளப்படுத்தப்பட்டு வரும் நிலையில், வவுனியா வைத்தியசாலையில் புதிய கொரோனா நோயாளர்களுக்கான விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.