அ.தி.மு.க ஆட்சியில் முன்னாள் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
மேலும் அவரது பங்குதாரர்கள் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, அரசின் ஒப்பந்தம் வாங்கித் தருவதாகக் கூறி, ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாயை பெற்று, மோசடி செய்ததாக கோவையை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் அண்மையில் சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
அத்துடன் அவர், அரச கட்டுமானப் பணிகளிலும் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையிலேயே குறித்த குற்றச்சாட்டுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இலஞ்ச ஒழிப்புத்துறையினர், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் எஸ்.பி.வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.