தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 53 ஆயிரத்து 942 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 138 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் 14 பகுதிகளில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.