கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 49 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 2 ஆயிரத்து 255 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 42 ஆயிரத்து 79 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.