இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) 40 ஆயிரத்து 78 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 21 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 12 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 3 இலட்சத்து 92 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 583 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.