இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 33 ஆயிரத்து 221 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 22 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 14 இலட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதேவேளை 3 இலட்சத்து 89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேநேரம் 421 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 31 ஆயிரத்தைக் கடந்துள்ளது.