இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை சிதைக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் எதிர்கட்சிகள் ஈடுபடுவதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், ”நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் நடந்துக்கொண்ட விதம் துரதிஷ்டமானது. கூட்டத்தொடர் நடைபெற்ற 4 வாரங்களும் மிக மோசமான அனுபவத்தை சந்திக்க வேண்டியிருந்தது.
இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை சிதைக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் அக்கட்சிகள் ஈடுபட்டன. அக்கட்சிகளின் நடிவடிக்கைகள் சகிப்புத்தன்மையின் அனைத்து எல்லைகளுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தன.
எதிர்கட்சிகளின் இந்த நடவடிக்கையை கடுமையாகத் தடுத்தாக வேண்டும். அதனால்தான் அக்கட்சிகளின் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.