நாட்டில் நிலவும் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு இந்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வை ஒருநாள் மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இவ்வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.
நாடாளுமன்றில் இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வார நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.