கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 325 பேர் பூரண குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 12 ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 54 ஆயிரத்து 968 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 96ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.