தமிழகத்தில் இன்னும் 6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மருத்துவ கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளன. இதனை நேரில் சென்று ஆய்வு செய்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ”திருமண நிகழ்வு உள்ளிட்ட ஒரு சில மதம் சார்ந்த நிகழ்வு நடப்பது சுகாதாரத்துறைக்கு சவாலாக இருக்கிறது.
தடுப்பூசி தட்டுப்பாடு அவ்வவ்போது இருக்கிறது. தற்போதைய நிலையில் 12 இலட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் இன்னும் 6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய தேவை இருக்கிறது.
பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.