உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தததையடுத்து, ஆப்கானிஸ்தானில் வசிக்க விரும்பாத மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க சில நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
அதற்கமைய 2 ஆயிரம் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக ஆப்ரிக்க நாடான உகாண்டா அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 500 பேர் உகாண்டாவின் என்டபே விமானநிலையத்தில் தரையிறங்கினர்.
இதேபோல 20 ஆயிரம் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
நடப்பாண்டில் 5 ஆயிரம் பேருக்கு பிரித்தானியாவில் வீடு கட்டிக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின்படி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.