ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சிறப்பு கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் அகற்றும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி உள்ளதால், அந்நாட்டில் பெண்களுக்கான சுதந்திரம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் மத்தியில் ஒருவித அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையிலேயே, ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.