பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 இலட்சத்தைக் கடந்துள்ளது.
அதன்படி, அங்கு 65 இலட்சத்து 4 ஆயிரத்து 978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம், அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 13 ஆயிரத்தை நெருங்குகிறது.
அதன்படி, அங்கு கொரோனா வைரஸ் தொற்றினால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 864ஆக பதிவாகியுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
அதேநேரம், ரஸ்யா 4ஆவது இடத்திலும் பிரான்ஸ் 5ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.