ஹெய்டியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் காயமடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
கரீபியன் தீவு நாடான ஹெய்டியின் டிபுரோன் தீபகற்பப் பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டா் அளவுகோலில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் வீடுகள் இடிந்து விழுந்தன.
அதில் வசித்த ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களையும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்து 868 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியிருப்பதோடு, 5 ஆயிரத்து 410 கட்டடங்களும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.