நாடளாவிய ரீதியில் நேற்று முதல் அமுலாக்கப்பட்டுள்ள புதிய பயணக் கட்டுப்பாடுகளுக்கமைய, மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கக்கூடியவர்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களின் விபரம்…
- சுகாதார சேவைகள்
- பொலிஸ் மற்றும் முப்படைகள்
- அரச அதிகாரிகள்
- முக்கியமான உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொள்பவர்கள்
- அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பவர்கள்
- அத்தியாவசிய சேவை வழங்குநர்கள்
- நெருங்கிய குடும்ப உறுப்பினரின் மரணத்திற்கு செல்பவர்கள் (ஆதாரம் தேவை)
- துறைமுகங்களுக்கான பொருட்கள் அல்லது போக்குவரத்து மற்றும் விமான நிலையத்திற்கு செல்பவர்கள் (ஆதாரம் தேவை)