கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 44 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 3 இலட்சத்து 90 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 366 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.