அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வெளியாகும் செய்தியில் எந்வித உண்மையுமில்லை என்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கோ அல்லது அதற்கான நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என அவர் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.