ஆங்கில கால்வாய் ஊடாக 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுவே ஒரே நாளில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையாகும். முன்னதாக இந்த எண்ணிக்கை 430ஆக இருந்தது.
இதனிடையே பயணத்தை மேற்கொண்ட கிட்டத்தட்ட 200 பேரை பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை கிட்டத்தட்ட 12,500பேர் பயணம் செய்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான வழிகள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரித்தானிய அதிகாரிகள் சனிக்கிழமை 30 சிறிய படகுகளில் 828 பேரை மீட்டனர் அல்லது இடைமறித்ததாக உட்துறை அலுவலகம் கூறியது, பிரான்ஸ் அதிகாரிகள் 10 படகுகளில் 193 பேரை பிரித்தானியாவை அடைய விடாமல் தடுத்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை வரவுகள் இல்லை என்று உட்துறை அலுவலகம் கூறியது.