ஸ்கொட்லாந்தில் உள்ள 16 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீத பேருக்கு, இப்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர்.
அதேவேளை தடுப்பூசி செலுத்திய ஒருவாரத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட 44,000 பாடசாலை மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகக் பொது சுகாதார ஸ்கொட்லாந்து புள்ளிவிபர தரவுகள் காட்டுகின்றன.
ஒட்டுமொத்தமாக, ஸ்கொட்லாந்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80.3 சதவீத பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், சமீபத்திய வாரங்களில் கொவிட் புதிய நேர்மறை சோதனைகள் வேகமாக அதிகரித்துள்ளது.
தினசரி புள்ளிவிபரங்கள் இப்போது ஜூலை மாதத்தில் காணப்பட்ட உச்ச நிலைகளுக்கு அருகில் உள்ளன.
அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கும் அறிவியல் அமைப்பிலிருந்து ஆலோசனையின் மாற்றத்திற்கு முன்னர், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு சில உடல்நலக் கோளாறுகள் இருந்தால், அதிக ஆபத்தில் இருக்கும் ஒருவருடன் வாழ்ந்தாலோ அல்லது கிட்டத்தட்ட 18 வயதாக இருந்தாலோ மட்டுமே அவர்கள் தடுப்பூசி பெற முடியும்.
மேலும், 18-29 வயதுக் குழுவில், 73.6 சதவீத பேர் இதுவரை முதல் அளவு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 40.8 சதவீத பேர் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர்.