அமெரிக்கா ஈராக்கைவிட்டு வெளியேறினாலும் பிரான்ஸ் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்குமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
மத்தியகிழக்கு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பின் ஒரு பகுதியாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஈராக்கின் தலைநகரமான பக்தாத் சென்றிருந்தார்.
அங்கு, ஈராக் அரசாங்கத்துடன் நடாத்தப்பட்ட பேச்சவார்த்தையின் பின்னர் உரையாற்றிய அவர், “அமெரிக்காவின் தெரிவு எதுவாக இருந்தாலும் அமெரிக்கா ஈராக்கைவிட்டு வெளியெறினாலும்கூட, பிரான்ஸ் தொடர்ந்தும் பயங்கரவாதத்துடன் போராட, ஈராக்கில் தங்கியிருக்கும். ஈராக் அரசாங்கம் கேட்கும்வரை நாம் தொடர்ந்தும் அங்கு தங்கியிருப்போம்.
ஈராக்கில் எங்களது நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் வலு பிரான்சிடம் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.