வடகொரியா தனது யோங்பியோன் அணு உலையை மீண்டும் தொடங்கியுள்ளதாக, ஐ.நா. அணு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் புளூட்டோனியம், இந்த அணு உலையின் வளாகத்தில் உற்பத்தி செய்யப்படுவதாக நம்பப்படுகிறது.
சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) 2009இல் பியோங்யாங்கால் வெளியேற்றப்பட்டது. ஆனால் மதிப்பீடுகளைச் செய்வதற்கு செயற்கைக்கோள் படங்களை நம்பியுள்ளது.
அணு உலை ஜூலை மாதத்திலிருந்து குளிர்ச்சியான நீரை வெளியேற்றுவதாக கண்காணிப்புக் குழு கூறியது. அது செயற்பாட்டைக் குறிக்கிறது.
5 மெகாவாட் உலை கொண்ட அணுசக்தி வளாகமான யோங்பியோன், வட கொரியாவின் அணு திட்டத்தின் மையத்தில் உள்ளது.
சர்வதேச அணுசக்தி நிறுவன தரவு படி, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிங்கப்பூரில் கிம் ஜோங் உன்னைச் சந்தித்த சில மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு இது அணு உலையில் செயற்பாட்டு நடவடிக்கையின் முதல் அறிகுறியாகும்.