ஃபைஸர் கொவிட் தடுப்பூசியுடன் தொடர்புடையதாக நம்பப்படும், முதல் மரணம் நியூஸிலாந்தில் பதிவாகியுள்ளது.
ஒரு சுயாதீன தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு சபை, தடுப்பூசியின் அரிய பக்கவிளைவாக, மாரடைப்பு அல்லது இதயத் தசையின் வீக்கம் காரணமாக அநேகமாக இந்த பெண்ணின் மரணம் நிகழ்ந்திருக்கலாம் கூறியுள்ளது.
தடுப்பூசியைத் தொடர்ந்து பிற மருத்துவப் பிரச்சினைகள் இருப்பதையும் தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
எனினும், மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், கெகாவிட் -19 தடுப்பூசி சுயாதீன பாதுகாப்பு கண்காணிப்பு சபை, மாரடைப்பு ஒருவேளை தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று கூறியது.
நியூஸிலாந்தில் ஃபைஸர் கொவிட் தடுப்பூசியுடன் இணைக்கப்பட்ட முதல் மரணம் இதுவாகும்.