ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மேலுமொரு தொகுதி நாளை (செவ்வாய்க்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன.
அதன்படி, 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன என ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் கிடைக்கப்பெறவுள்ள இந்த தடுப்பூசி தொகை கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் இதுவரையில் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 88 பேருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.