இலங்கையில், அதிகளவான தடுப்பூசிகள் நேற்றையதினம் செலுத்தப்பட்டன என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் நேற்று 5 இலட்சத்து 71 ஆயிரத்து 589 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
குறிப்பாக அதிகளவாக 48 ஆயிரத்து 280 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 4 இலட்சத்து 88 ஆயிரத்து 158 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டன.
அதேநேரம், 11 ஆயிரத்து 951 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதலாவது டோஸும் 653 பேருக்கு இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டன.
அதேநேரம் 20 ஆயிரத்து 857 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் 16 பேருக்கு முதலாவது டோஸும் செலுத்தப்பட்டன.
மேலும் 12 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸும் ஆயிரத்து 662 பேருக்கு இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டன.