அமெரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு புதிய பயண விதிகளை ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது.
மிகவும் அவசியமான பயணங்களைத் தவிர, பிற பயணங்களை நிறுத்தி வைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது.
அமெரிக்காவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான தினசரி சராசரி கடந்த குளிர்காலத்திற்குப் பிறகு முதல் முறையாக 100,000ஐத் தாண்டியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமீபத்திய தொற்லை, டெல்டா மாறுபாட்டால் இயக்கப்படுகிறது. அமெரிக்க தெற்கில் மிகவும் கடுமையான அளவு பாதிப்பு பதிவாகியுள்ளது. ஆனால் தொற்றுகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் முதன்முதலில் ஜூன் மாதத்தில் அமெரிக்கர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கிய போதிலும், மார்ச் 2020ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இஸ்ரேல், கொசோவோ, லெபனான், மாண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகியவையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பான பயணப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 நோயாளிகளுக்காக அமெரிக்காவில் மருத்துவமனை சேர்க்கை ஜனவரி முதல் இதுவரை இல்லாத அளவிற்கு எட்டியது. நாடு 142,000க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் மருத்துவமனை படுக்கைகளில் இருந்தபோது நாடு அதன் உச்சத்தை எட்டியது.
அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் தரவுகளின்படி, புளோரிடாவில் 16,000க்கும் மேற்பட்ட கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர் கிட்டத்தட்ட ஐந்து தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஒன்று குறைந்தபட்சம் 95 சதவீத திறனை எட்டியுள்ளது.
இறப்பு வீதமும் அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 1,00க்கும் அதிகமாக உள்ளது. அனைத்து அமெரிக்கர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொவிட்-19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் ஃபைசர் தடுப்பூசியின் முழு ஒப்புதலுடன், பைடன் நிர்வாகம் தடுப்பூசி வீதங்களை அதிகரிப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) வெளியிட்ட ஆய்வின்படி, தடுப்பூசி போடப்படாதவர்கள் கொவிட்-19 உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 29 மடங்கு அதிகம்.