ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சிக்கும் பிரித்தானிய குடிமக்களுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எப்படி உதவுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், கட்டார் சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, காபூல் விமான நிலையத்தை மீண்டும் திறக்க தலிபான்களை வற்புறுத்துவது பற்றிய முக்கிய விடயங்கள் விவாதிக்கப்படும்.
பிரித்தானிய அதிகாரிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்தும் அவர் விளக்கமளிக்கவுள்ளார்.
வளைகுடா மாநிலம் விமான நிலையத்தில் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது என்பது பற்றி ஏற்கனவே விவாதங்களைத் தொடங்கியுள்ளது.
தனது பிராந்திய சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தில், டொமினிக் ராப், கட்டார் மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
டோஹாவில் உள்ள மூத்த தலிபான் தலைவர்களை பிரித்தானிய அதிகாரிகள் சந்தித்து வருகிறார்கள். அந்த பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து அவர்கள் வெளியுறவு செயலாளருக்கு விளக்கம் அளிப்பார்கள்.
ஆப்கானிஸ்தானுக்கான பிரித்தானிய தூதரகம், கடந்த வாரம் காபூலில் இருந்து வெளியேறியது. இப்போது டோஹாவில் இயங்குகிறது என்று வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.