ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்கள் பாலினத்தால் பிரிக்கப்படும் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் மேலும், ஒரு புதிய ஆடை குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தலிபான் அறிவித்துள்ளது.
இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி கூறுகையில், ‘பெண்கள் படிக்க அனுமதிக்கப்படுவார். ஆனால் ஆண்களுடன் சேர்ந்து அல்ல’ என கூறினார். மேலும், மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடங்களின் மதிப்பாய்வையும் அவர் அறிவித்தார்.
1996ஆம் மற்றும் 2001ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தலிபான் ஆட்சியின் கீழ் பாடசாலைகளில் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கல்வி கற்க தடை செய்யப்பட்டனர்.
எனினும், தற்போது ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள்,பெண்கள் கல்வி கற்பதை அல்லது வேலை செய்வதைத் தடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
ஆனால், ஒகஸ்ட் 15ஆம் திகதி அவர்கள் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதிலிருந்து, பொது சுகாதாரத் துறையில் உள்ளவர்களைத் தவிர அனைத்துப் பெண்களையும், பாதுகாப்பு நிலைமை மேம்படும் வரை வேலையில் இருந்து விலகி இருக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.