பிரித்தானியாவில் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த, தலைமை மருத்துவ அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அத்துடன், இளைஞர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியின் ஒரு டோஸ் வழங்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பாடசாலைகளில் மாணவர்களுக்கு கொவிட் தொற்று பரவுதலை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பரிசீலித்த பின்னர் சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தலாம் என அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இடையூறை குறைக்க இது ஒரு பயனுள்ள நடவடிக்கையாகும்.
இந்த முடிவின்படி, ஆரோக்கியமான சிறுவர்களுக்கு ஃபைஸர்- ஃபயோஎன்டெக் தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும். இந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு 30 இலட்சம் சிறுவர்கள் தகுதி பெறுவார்கள். பாடசாலைகள் மூலம் இந்தத் தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சமூகத்தில் தொற்றுநோய் மற்றும் மாறுபாடுகளின் பரவலைக் குறைக்க, முடிந்தவரை பல சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு மாறியுள்ளது.
ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (இஎம்ஏ) இந்த ஆண்டு மே மாதம் 12-15 வயதுடைய சிறுவர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போது டென்மார்க், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 12-15 வயதுடைய சிறுவர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.