மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தி.மு.க அரசு விளக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தி.மு.க தன் அரசியல் நாடகத்தையும், நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதையும் இனியாவது நிறுத்தி விட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்க வேண்டும்.
தன்னம்பிக்கை தேவைப்பட்டால், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழு வழியே சிறப்பு வகுப்பு நடத்தி, மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.