இலங்கையில் நேற்று(புதன்கிழமை) மாத்திரம் இரண்டாயிரத்து 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் புதுவருட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 96 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 699 ஆக அதிகரித்துள்ளது.