விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோர் நாளைய தினம் (சனிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளூராட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி, 9 ஆம் திகதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுடன், ஒக்டோபர் 12 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகியிருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், செப்டம்பர் 23 ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் செப்டம்பர் 25 ஆம் திகதி வேட்பு மனுவை திரும்பப் பெறலாம்.
மாவட்டங்கள் மறுசீரமைப்புக் காரணமாக 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளுராட்சித் தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.