ஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, நான்கு இலட்சத்தை கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவோக்கியாவில் நான்கு இலட்சத்து 348பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 64ஆவது நாடாக விளங்கும் ஸ்லோவோக்கியாவில் இதுவரை 12ஆயிரத்து 566பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 370பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்தாயிரத்து 48பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 47பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மூன்று இலட்சத்து 82ஆயிரத்து 734பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.