கலிபோர்னியாவின் உலகப் புகழ்பெற்ற சீக்வோயா தேசியப் பூங்காவில் தீப்பிடித்து எரிவதால், தீயணைப்பு வீரர்கள் பழங்கால மரங்களைச் சுற்றி தீயை எதிர்க்கும் போர்வைகளை போர்த்தியுள்ளனர்.
ஜெனரல் ஷெர்மன் உட்பட பல மரங்களை அலுமினியப் படலத்தால் பாதுகாத்து வருகின்றனர்.
இதுகுறித்து சீக்வோயா மற்றும் கிங்ஸ் கனியன் தேசிய பூங்கா செய்தித் தொடர்பாளர் ரெபேக்கா பேட்டர்சன் கூறுகையில், ‘இது பல, பல மக்களுக்கு மிக முக்கியமான பகுதி, எனவே இந்த தோப்பைப் பாதுகாக்க நிறைய சிறப்பு முயற்சிகள் நடக்கிறது’ என கூறினார்.
சில மணிநேரங்களுக்குள் உலகின் மிகப் பெரிய மரங்களின் தோப்பாகிய ஜெயன்ட் காட்டை நெருப்பு நெருங்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இந்த காட்டில் பூமியில் மிகப்பெரிய மரமாக கருதப்படும் 275 அடி (83 மீ) ஜெனரல் ஷெர்மன் மரம் உட்பட சுமார் 2,000 சீக்வோயா மரங்கள் உள்ளன.
தொகுதி அடிப்படையில், ஜெனரல் ஷெர்மன் பூமியில் வாழும் மிகப்பெரிய ஒற்றை-தண்டு மரம் மற்றும் சுமார் 2,300 முதல் 2,700 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
வல்லுநர்கள் சீக்வோயா மரங்கள் மிகவும் தீ-எதிர்ப்பு மற்றும் தீப்பிழம்புகளிலிருந்து தப்பிக்க உருவாகியுள்ளதாக கூறுகின்றனர்.
350க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் தண்ணீரை வீழ்த்தும் விமானங்களுடன், தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு கலிஃபோர்னியா மாநிலத்தில் 7,400க்கும் மேற்பட்ட காட்டுத்தீ எரிந்து 2.2 மில்லியன் ஏக்கருக்கு மேல் எரிந்துள்ளது.
அதிக வெப்பநிலை மற்றும் தீவிர வறட்சி நிலைகளால் இந்த காட்டுத்தீ உந்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காட்டுத்தீயைத் தூண்டும் வெப்பமான, வறண்ட வானிலையின் அபாயத்தை அதிகரிக்கிறது.
கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது பெரிய டிக்ஸி தீ இப்போது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.