பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32ஆயிரத்து 651பேர் பாதிக்கப்பட்டதோடு 178பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 73இலட்சத்து 71ஆயிரத்து 301பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 983பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து இரண்டாயிரத்து 300பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 20பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 59இலட்சத்து 34ஆயிரத்து 018பேர் பூரண குணமடைந்துள்ளனர்.