பெலராஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெலராஸில் மொத்தமாக ஐந்து இலட்சத்து 12ஆயிரத்து 460பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 53ஆவது நாடாக விளங்கும் பெலராஸில் இதுவரை ஐந்து இலட்சத்து 12ஆயிரத்து 460பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவாயிரத்து 978பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 979பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட எட்டாயிரத்து 431பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.