பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி கருகலைப்பு செய்ய அனுமதிக்கோருகின்ற சிறுமியர்களின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்துள்ளது.
இதன்படி கடந்த மே மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிய நிலையில், கர்ப்பம் அடைந்த ஏழு சிறுமியர்கள் கருகலைப்புக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியரின் குடும்பத்தினர் தாக்கல் செய்துள்ள மனுக்களில் மருத்துவ வாரியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இவ்வாறு ஜுலை மாதத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று சிறுமியருக்கும் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் உயர் நீதிமன்றம் இவ்வாறு கருகலைப்புக்கு அனுமதி வழங்கினால் துஷ்பிரயோக வழக்கின் சாட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நிலையும் எழுந்துள்ளது.
இந்நிலையில், துஷ்பிரயோகம் செய்யும் குற்றவாளிகளுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்கப்படாதது, மற்றும் இதற்கு எதிராக புதிய சட்டங்கள் யாப்பின் மூலம் கொண்டுவரப்படாதது அரசின் அசமந்த போக்கை காட்டுவதாக நிபுணர்கள் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.