வளரும் நாடுகளுக்கு 500 மில்லியன் டோஸ் கொவிட் தடுப்பூசி மருந்துகளை வழங்க, அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
வளரும் நாடுகளுக்கு ஏற்கெனவே 580 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அதில் 140 மில்லியன் டோஸ்கள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளன.
வளரும் நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனமான ஃபைஸரின் கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட 11 பில்லியன் டோஸ்கள் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் அவற்றின் மக்கள்தொகையில் வெறும் இரண்டு சதவீத அளவில்தான் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுள்ளதாக ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தரவு கூறுகிறது.