பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிந்துள்ளதாக, தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் குடியேற தகுதியான ஆப்கானியர்களின் பாதுகாப்பை சிக்கலுக்கு உள்ளாக்கும் விதத்தில், இந்த கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் டசன் கணக்கிலான மக்களுக்கு தவறுதலாக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டவர்களின் பெயர்கள் எல்லோருக்கும் தெரியும் படி அனுப்பப்பட்டிருந்தது.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் இதற்கு மன்னிப்பு கேட்டு, அவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கூறியது. இந்தநிலையில் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவும் ஏற்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட தரவுக் கசிவு தொடர்பான விவகாரத்தில், பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள் அனுப்பிய மின்னஞ்சலில், சில மின்னஞ்சல்கள் மற்றும் 55 நபர்களின் பெயர்களை எல்லோரும் பார்க்கும் விதத்தில் இருந்தது.
முதல் மின்னஞ்சல் தரவுக் கசிவில், பிரித்தானியாவில் குடியேற விரும்பும் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு தவறுதலாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக ஒரு முழு விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாகவும் ஒரு அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் கூறினார்.