இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) 31 ஆயிரத்து 957 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 35 இலட்சத்து 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 28 இலட்சத்து 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 3 இலட்சத்து 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் 279 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 46 ஆயிரத்தைக் 80 ஆக உயர்வடைந்துள்ளது.