கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நள்ளிரவு 12.06 மணியளவில் இரகசியமான முறையில் அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திற்கு யுகதனவி மின் உற்பத்தி நிலையம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்காரணமாக, பொத்தான் ஒன்றை அழுத்தி முழு இலங்கையையும் இருளில் மூழ்கடிக்க அமெரிக்காவினால் முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயம் எனவும் மக்களின் இறைமைக்கு எதிரான தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.