இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்களில் 4 இலட்சத்து 55 ஆயிரத்து 344 பேர் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 46 ஆயிரத்து 517 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.